பாபாசாகேப் அம்பேத்கரும் நாங்கள் பதினான்கு சமூக செயல்பாட்டாளர்களும் பம்பாய் சட்டப் பேரவைக்கு 1935 தேர்தலில் தேர்வு பெற்றோம். நான்அப்போது பி.ஏ., பட்டப்படிப்பு பரீட்சையில் தேர்வாகியிருந்தேன். எல்.எல்.பி., படிப்பின் முதல் பருவத்திற்கான பூர்வாங்க தேவைகளை மட்டும் முடித்துவிட்டு களத்திற்குசென்றுவிட்டேன். பாபாசாகேப் என்னை பம்பாய்க்கு அழைத்து மிகுந்த அன்புடன் என்னிடம் ‘நம்முடைய தேர்தல் வெற்றி என்பது நாம் இலக்கை எட்டிவிட்டதாக பொருள்படாது’ என விளக்கினார்.அவர் மேலும் ‘நாம் அனைவரும் சமூகப்பணி செய்யவிரும்பினால் நாம் ஒன்று சிறுவயதிலிருந்தே பணக்காரர்களாக இருக்க வேண்டும், அல்லது நமக்கென ஒரு சுயாதீனமான தொழில் இருக்க வேண்டும்’ என்றும் சொன்னார். ‘‘நமக்கு இரண்டுமே இல்லை. சமூகப் பணிக்காக பிறரிடமிருந்து பணம்பெறாமல் வாழவும் அரசியலில் நாங்கள் இணைவதையுமே தாம் விரும்புவதாகவும்’’ கூறினார். எனவே அவர் என்னை எனது சட்டக் கல்வியை முடிக்க பணித்தார். முடித்து தனியாக வழக்கறிஞர் தொழில் தொடங்கி குடும்பத்தை பாதுகாக்க வழிவகை செய்துவிட்டு பின்னர் சமூகப் பணியை ஏற்குமாறு அறிவுறுத்தினார். அவர் தனக்கு நேர்மையான ஆட்கள் வேண்டும் என்றார். தனது வாழ்வாதாரத்தை நிர்வகிக்க முடியாமல் ஒருவரால் சமூகத்திற்கான எந்த நலப்பணிகளையும் செய்ய முடியாது என்றார்.எனவே நான் சட்டப் பேரவையில் இருக்கும் போதே எனது சட்டப்படிப்பை தொடர்ந்தேன். எல்எல்பி பட்டத்தை பாபாசாகேப் அம்பேத்கரின் உதவியோடு முடித்தேன். அதன்பின் நான் ஜல்காவ்னில் வழக்கறிஞர் தொழிலை தொடங்கினேன். எனக்கு அவர் ஒருபுத்தகப் பட்டியலை உருவாக்கி தந்தார். 500 ரூபாய்மதிப்பிற்கு நான் புத்தகங்கள் வாங்கினேன். ஒவ்வொருவரும் தமது வருமானத்தில் பத்து சதவீதம் புத்தகங்களில் முதலீடு செய்ய வேண்டும் என சொல்வது அவர் வழக்கம்.(என்.சி. ரத்து தனது ஆசிரிய உரையில் எழுதுகிறார்; டாக்டர் அம்பேத்கர் தொடர்ந்து டி.ஜி.ஜாதவுடன் தொடர்பில் இருந்தார். அம்பேத்கர் இங்கிலாந்து சென்றிருந்தபோது ஜாதவுக்கு 1946, அக்டோபர் 29 அன்று டஸ்கன் விடுதி, 67 ஷாஃப்ட்ஸ்பெரி அவன்யு, லண்டன் எனும் முகவரியிலிருந்து இக்கடிதத்தை எழுதினார்.)‘... நான் இங்கு 19 ஆம் தேதி வந்து சேர்ந்தேன். எனது பயணம் இனிமையாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருந்தது. வழியில் எனக்கு சளி பிடித்துக் கொண்டது என்பதைத் தவிர அது குறித்து புகார் சொல்ல எதுவும் இல்லை. சளி இன்னும் என்னைவிட்டு ஒழியவில்லை, எனக்கு பெரும் துன்பத்தை தந்து கொண்டிருக்கிறது. மார்புச்சளி வந்து விடுமோவென அஞ்சுகிறேன்.நான் வந்துசேர்ந்த மறுநாளே சிவாராஜ் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்பது உனக்கும் தெரிந்திருக்கலாம். இங்கிருக்கும் அனைத்து பணிகளும் என் மீது விழுந்துவிட்டன. மனு தயாரிக்க நான் ஒரு முழு வார்த்தை ஒதுக்க வேண்டிவந்தது. இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய விவகாரங்கள் குறித்து இருக்கும் அறியாமை மலைப்பூட்டும் அளவில் இருக்கிறது.எழுத்தில் ஏதாவது அவர்கள் முன்னால் வைக்கப்பட்டால் ஒழிய அவர்கள் புரிதல் அதள பாதாளத்தில்தான் இருக்கும். இதனால் ஒரு விவரமான மனு மிக அத்தியாவசியமாகிறது. அதன் சில பிரதிகளை நான் உனக்கு தபாலில் அனுப்புகிறேன். இதை அச்சிடுவதற்கு மிகச் சிரமப்பட வேண்டியிருந்தது. அச்சிற்கு சொல்லப்பட்ட விலை மலையளவு, மேலும் யாரும் ஒரு மாதத்திற்கு குறைவான காலத்தில் இதைஅச்சிட்டுக் கொடுக்க ஒப்பவில்லை. கடினமான சூழல்களுக்கிடையில் நான் இவற்றை சைக்ளோஸ்டைல் செய்வித்தேன்.இது ஒரு சிறிய மனு தான் ஆனாலும் நமது வாதத்தை தெளிவாக முன்வைக்கிறது. எனது வருகை இங்கு பலத்த பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. கடந்தவார சண்டே அப்சர்வரும், சண்டே கிரானிக்குகளும் பெரிய தலைப்புச் செய்திகளும், பட்டியல் சாதிகள்குறித்து பத்தி நிறைய செய்திகளும் வெளியிட்டிருந்தார்கள். அடுத்த வியாழக் கிழமை முதல் நான்முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோரை சந்திக்க தொடங்குவேன். நான் சில பத்திரிகையாளர்களையும் சந்திப்பேன். லண்டன் டைம்ஸின் ஒரு ஆசிரியரையும் நான் பார்க்க இருக்கிறேன். அவர் எனது நண்பர்.இங்கிருக்கும் நமது இளைஞர்கள் சிலர் என்னைப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் மீண்டும் இன்று மாலையும் வருகிறார்கள். அவர்கள் எனக்கு பெரும் ஏமாற்றத்தை தருகின்றனர். அவர்கள் ஒரு பெரிய வாய்ப்பேச்சு கூட்டம். அவர்கள் என்னிடம் சில மென்மையான கேள்விகளைக் கேட்டார்கள், எனக்கு கடுங்கோபம் வந்தது. நான் எப்படியோ என் கோபத்தை மறைத்துக் கொண்டேன். இன்று என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. அதை நினைத்தாலே எனக்கு பயங்கரமாக இருக்கிறது.ஜின்னா, ஜோகேந்திர நாத் மண்டலை இணைத்துக்கொண்டது ஒரு மகத்தான தந்திர உத்தி. நாம் மண்டலை ஆதரிக்க வேண்டும். நான் அப்படியானதொரு தந்தியை அவருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால், இந்நிகழ்வின் பொருட்டு நாம் அவரையோ நம்மை நாமேயோ வாழ்த்திக் கொள்ள முடியாது. நாம் காங்கிரசிடமிருந்தும் அதே சமயம் லீகிடமிருந்தும் நம்முடைய சுதந்திரத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். ஏற்கெனவே நமக்கு இரண்டு இடங்கள் கிடைத்திருந்தாலும் நாம் இரு பெரிய கட்சிகளின் கருவியாகி இருக்கிறோம். இது நிச்சயமாக திரு.காந்திக்கு அவரது வாழ்நாள் அதிர்ச்சியாக இருந்திருக்கும், ஆனாலும் அவர் நம் மீதான தனது அணுகுமுறையை எவ்வகையிலும் மாற்றிக் கொள்வார் என நான் நினைக்கவில்லை.(1. இது கேபினட் மிஷனும் தீண்டத்தகாதவர்களும் பற்றிய குறிப்பாக இருக்க வேண்டும். அது மகாராஷ்டிர அரசின் கல்வித் துறை வெளியிட்ட பாபாசாகேபின் எழுத்துக்களும் பேச்சுக்களும் ஆங்கில தொகுதி 10 இல்(437 - 49) அச்சடிக்கப்பட்ட பிரசுரம் என இணைக்கப்பட்டுள்ளது.2.அம்பேத்கர் இங்கு குறிப்பது அவரால் 1942 இல் நிறுவப்பட்ட ‘இந்திய அரசு பட்டியல் சாதிகள் கல்விஉதவி திட்டத்தின்’ கீழ் பயனாளிகளாக லண்டன் சென்றுமேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த மாணவர்களாக இருக்கலாம். இந்த திட்டம் 1946 இல் உருவான காங்கிரஸ்இடைக்கால அரசால் அம்பேத்கரின் எதிர்ப்புக்களையும் மீறி கைவிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த என்.ஜி.உகே (1924 - 2006) தாள் இக்கல்வி உதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி வி.பி.ராவத்துக்கு அளித்த பேட்டி உகே அவர்களின் மறைவுக்குப் பின் இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. hவவயீ//றறற.உடிரவேநசஉரசசநவேள.டிசப (2017 மார்ச் 12 ஆம் தேதி பார்க்கப்பட்டது)(‘அண்ணலின் அருகிறுந்து’... நூலிலிருந்து... )